பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

விந்தன் கதைகள்

புகை சுருள் சுருளாக மேலே போவதைக் கண்டு களித்துக் கொண்டிருந்தான். காத்தான். அதைக் கவனிக்கவில்லை. விஷயத்தைச் சொன்னான்; விம்மினான். பல்லைக் காட்டினான்; பரிதவித்தான்; கதறினான்; காலில் விழுந்தான், இவ்வளவும் ஒரு பத்து ரூபாய் பணத்திற்கு!

“இந்தச் சமயம் மனசு வச்சி, எனக்கு ஒரு பத்து ரூபா உதவுங்க, சாமி நாளையிலேயிருந்து செருப்புப் போடற பணத்திலிருந்து அந்தக் கடனுக்காகத் தினம் ஒரு ரூபாய் பிடிச்சிக்கிங்க சாமி!” என்று காத்தான் ‘கெஞ்சு, கெஞ்சு’ என்று கெஞ்சினான்.

“ஒரு காலணா கடன் கிடையாது” என்று கண்டிப்பாய்ச் சொன்னான் கடை முதலாளி.

“குழந்தை ரொம்பவும் கஷ்டப்படுதுங்க. உங்க குழந்தை மாதிரி நெனைச்சுக்கிங்க மருத்துவச்சி வச்சுப் பார்க்கனுங்க!”

“சீ குழந்தையாவது, மண்ணாங்கட்டியாவது? ஊரிலே தர்ம ஆஸ்பத்திரி இல்லையா? நீ கெட்ட கேட்டுக்கு வீட்டுக்கு மருத்துவச்சி வைத்துப் பார்க்க வேணுமா?” என்று சீறினான் அரியநாயகம்.

“சும்மா தர்ம ஆஸ்பத்திரின்னு பேருங்க, அங்கேயும் பணம் கொடுத்தால் தானுங்க!” என்றான் காத்தான்.

“எக்கேடாவது கெட்டுப் போ இதென்ன லேவா தேவிக் கடையா, உனக்குக் கடன் கொடுப்பதற்கு?” என்று சொல்லிவிட்டு, அரியநாயகம் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டு எங்கேயோ போய்விட்டான்.

காத்தான் கடைக் குமாஸ்தாவைப் பார்த்தான்; குமாஸ்தா காத்தானைப் பார்த்தார்; “என்னைப் பார்த்தால் என்ன செய்வது என்று குமாஸ்தா அனுதாபத்துடன் சொல்லி விட்டு இந்தா என்னிடம் இருப்பது இதுதான்!” என்று தன் இடையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்துக் காத்தான் கையில் கொடுத்தார்.

காத்தான் அதைப் பெற்றுக் கொண்டு மனச் சோர்வுடன் வீடு திரும்பினான். “இனத்தை இனம் காக்கும் என்கிறார்களே, அது சரிதான்!” என்று எண்ணிக் கொண்டே அவன் வழி நடந்தான்.

* * *

ன்றிரவு அரியநாயகம் படுக்கப் போகும்போது அவனுக்கு ஏனோ மன நிம்மதியே இல்லை. அவன் மனமே அவனை நிந்தனை செய்தது: “உன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு யார் காரணம்? காத்தான்தானே? கண்ணுக்குத் தெரியாத கடவுள் என்று நீ சொல்லலாம். இல்லை; கண்ணுக்குத் தெரிந்த கடவுள் யார் என்று