பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்க வளையல்

65

தனக்குச் சேரவேண்டிய பாக்கிக்காகக் குதிரை வண்டியையும் ஆடுகளையும் பறிமுதல் செய்தபோது நான் ஒன்றும் பணம் கொடுத்து உதவவில்லை. ஆனால் அதற்காக அவள் மனம் நோவதைப் பார்த்து என்னால் மெளனம் சாதிக்கவும் முடியவில்லை. சிறிது அச்சத்துடனே அவளை நெருங்கி, “அஜ்ஜா! தற்சமயம் அவற்றை மீட்டுக் கொடுக்கக்கூடிய நிலைமையில் தான் அல்லா என்னை வைத்திருக்கிறார். ஆனாலும் அவற்றால் உனக்கு ஒன்றும் பயனில்லை. வேண்டுமானால் என்னிடமிருந்து அந்தப் பணத்தை நீ ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு, உனது ஜீவியத்திற்கு ஏதாவது வழி தேடிக் கொள். இப்படி என் வலுவில் உனக்கு உதவி செய்ய முன் வருவதைப் பற்றி நீ ஒன்றும் தப்பர்த்தம் செய்து கொள்ளாதே! உனது சகோதரன் மாதிரி என்னை...” என்று நான் இழுத்தேன்.

இதைக் கேட்டதும் அஜ்ஜாவின் முகத்தில் ஏனோ ஒருவிதான பயங்கரப் பீதி குடிகொண்டது. அவளுடைய உதடுகள், “உனது சகோதரன் மாதிரி என்னை... உனது சகோதரன் மாதிரி என்னை....” என்று திருப்பித் திருப்பி முணுமுணுத்தன.

அதற்குமேல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் மெல்ல அவள் மெல்லிய கரத்தைப் பற்றினேன். ஆனால் “உன்னை நிக்கா செய்து கொள்கிறேன்” என்று சொல்ல எனக்கு அப்பொழுது தைரியம் வரவில்லை. அதற்குப் பதிலாக, “உன்னை என்றும் நான் கைவிடமாட்டேன்” என்று மட்டும் உறுதி கூறினேன். அதைக் கேட்டு அவளது முகம் மலர்ந்தது; அந்த முகத்தைப் பார்த்து எனது முகமும் மலர்ந்தது.

* * *

டுத்த நாளே நாங்கள் இருவரும் வேலூருக்குப் பிரயாணமானோம். அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களுக்கெல்லாம் எனது நண்பன் அப்துல்காதரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவனைக் கண்டுபிடிப்பதில் எனக்கு அப்படி ஒன்றும் சிரமம் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் அப்பொழுது வேலூர் லாங் பஜாரில் பெரிய அரிசி மண்டி வியாபாரியாயிருந்தான். அவனுடைய உதவியைக் கொண்டு அஜ்ஜாவை எங்கள் மதச்சம்பிரதாயப்படி விவாகம் செய்து கொண்டேன். அதற்குப் பிறகு அவனுடைய மண்டியிலேயே மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் எனக்குக் குமாஸ்தா வேலையும் கிடைத்தது.

நாலைந்து வருடங்கள் நாங்கள் ‘பஹூ குஷீ’ யாகக் காலத்தைக் கழித்தோம். இருந்தாலும் வாழ்க்கையின் வரவுக்கும் வயிற்றுப்

வி.க. -5