பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

விந்தன் கதைகள்

பிறகு, ஒரு சாலையின் ஒரமாக வண்டியை நிறுத்தி விட்டுச் சற்று உட்கார்ந்தேன்.

அப்பொழுது, “அடே, யாரடா அவன் அங்கே ஏன் வண்டியை நிறுத்தினாய்? ‘ரிக்ஷாஸ்டாண்ட்’ என்னத்திற்காக இருக்கிறது? என்று அதட்டிக்கொண்டே ஒரு போலீஸ்காரன் வந்தான்.

நான் பேசாமல் எழுந்து நின்றேன். ‘என்னடா முழிக்கிறே? வா ஸ்டேஷனுக்கு’ என்றான் அவன்.

அப்பொழுது என் கையில் ஏதாவது காசு இருந்தாலும் ஒரு நாலணாவை எடுத்து அவனிடம் கொடுத்துத் தப்பித்துக் கொண்டிருப்பேன். அதுவும் இல்லை. எனவே பேசாமல் வண்டியை இழுத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் நடந்தேன்.

***

றுநாள் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போவதற்காகக் கிளம்பினேன். அப்பொழுது என் மனைவி மாங்காளி பூரண கர்ப்பிணி. அவள் “கையிலே காசு இல்லாமல் கோர்ட்டுக்குப் போய் என்னா பண்ணாப் போறே? அவன் அபராதம் போடமாட்டானா?” என்று கேட்டாள்.

“என்ன பண்றது? ஜெயில்லே இருந்துட்டுத்தான் வரணும்!” “ஐயோ! நான் இருக்கிற இந்த நிலையிலே என்னை ஒண்டியா விட்டுப்பிட்டா நீ ஜெயிலுக்குப் போகப் போறே”

“நான் உசிரோடு இருக்கத்தானே இப்படிச் சொல்றே , இல்லாவிட்டா என்ன பண்ணுவே அதுமாதிரி நினைச்சுக்கோ எல்லாம் கடவுள் இருப்பார்!”

“இருக்காரே, இந்த நாலு நாளாகையிலே ஒரு காசும் இல்லாமெ ஜெயில்லே போடறதுக்கு” என்றாள் அவள்.

நான் அவளைப் பிரிய மனமின்றிப்பிரிந்து சென்றேன். இரண்டு வாரங்கள்தான் எனக்குச் சிறைவாசம் கிடைத்தது. அதற்குள் என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது

சிறைவாசம் முடிந்து வீட்டிற்கு வந்தேன்; ஒரே ஏமாற்றம். வீட்டில் பூரண கர்ப்பிணியாயிருந்த எனது மனைவியைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் சொன்ன சேதிதான் என்னை இந்த ஆண்டிகள் கூட்டத்தில் சேர்த்துவிட்டது.

நான் சிறை சென்ற மறுநாளே அவள் பிரசவ வேதனைக்கு உள்ளானாளாம். யாரோ கொடுத்த தகவலின் பேரில் ‘ஆம்புலன்ஸ்’