பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

விந்தன் கதைகள்

சந்திரசூரியனும் வாயு வருணனும் மட்டும் வழக்கம் போல் திரு. சதானந்தத்தை வஞ்சிக்கவில்லை; ஆனால் மனித வர்க்கம் அவரை வஞ்சித்தது; வதைத்தது.

தூக்கி விடுவாரின்றித் துன்பக்கேணியில் நெடுநாட்கள் நீந்திக் கொண்டிருந்த அவருடைய மனைவிக் கடைசியில் ஒரு நாள் களைத்துப் போனாள். முடிவு என்ன? முழுகிப்போனாள்!

அவள் தன் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சதானந்தம் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அப்பொழுதுதெல்லாம் அவரைக் கவனிக்காத தமிழுலகம், இப்பொழுதோ?

ஏன், இப்படி மாரடிக்கிறது?

* * *

{{larger|ந்த அதிசயத்தைக் கேளுங்கள்:

“நேற்று சூரிய கிரகணத்தின் போது நீராடச் சென்ற திரு. சதானந்தம் கடலில் மூழ்கிவிட்டார்” என்ற செய்தியைக் கேட்டதும், தமிழ் நாட்டில் அவருக்காகக் கண்ணீர் வடிக்காதவர்களே கிடையாது. அந்தக் கண்ணீரைக் கண்டு கடலே வெட்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நாடெங்குமிருந்து அநுதாபச் செய்திகளும், தந்திகளும் அவர் வீட்டுக்கு வந்து குவிந்தன.

அன்று அவரைப் பற்றி எழுதிய பத்திரிகாசிரியர்களெல்லாம் தங்கள் பேனாவை மசியில் தோய்த்து எழுதவில்லை; கண்ணீரில் தோய்த்து எழுதினார்கள்.

ரஸிகர்கள், கூட்டம் கூட்டமாய்க் கூட்டினார்கள்; பேச்சுப் பேச்சென்று பேசினார்கள்; தீர்மானம் தீர்மானமென்று நிறைவேற்றினார்கள்.

“சதானந்தம் சகாய நிதி” என்று நிதி திரட்டி அதை நல்ல வேளையாகச் செத்துப்போன அவருக்கும் அவர் மனைவிக்கும் அனுப்பி வைக்காமல், அவருடைய மக்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இன்னும் அவரைப் பார்க்காதவர்களெல்லாம் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டனர். பழகாதவர்களெல்லாம் பழகியதாகச்