பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதி வென்றதா?

95

“முன் ஜன்மத்தில் அவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி பகவான் விதிக்கும் தண்டனை”

“அப்பாவுக்கு அந்த விதி இல்லையோ?”

“இல்லை அவர் அதிர்ஷ்டசாலி!”

“இந்த அதிர்ஷ்டம் சுப்பனுக்கு இல்லையோ?”

“இல்லை.”

“ஏன் இல்லேம்மா?”

“அவன் பாவத்தைப் பண்ணியவண்டா!”

“பாவம் என்றால் என்னம்மா?”

“கெட்டதைச் செய்வது!”

“அப்பா என்னத்தைப் பண்ணினார்?”

“புண்ணியத்தைப் பண்ணினார்”

“புண்ணியம் என்றால் என்னம்மா!”

“நல்லதைச் செய்வது!”

“அப்பா என்ன புண்ணியம் பண்ணினார்?”

“அதென்னமோ எனக்குத் தெரியாது. போய் அப்பாவைக் கேளு!”

* * *

“அப்பா, அப்பா”

“என்னடா?”

“முன் ஜன்மத்தில் நீ என்னமோ புண்ணியம் பண்ணினாயாமே, அப்பா?”

“உனக்கு யார் அதைச் சொன்னா?”

“அம்மா சொன்னா!”

“அவளுக்கு எப்படித் தெரியுமாம்?”

“அது எப்படியோ!”

“நீ ஏன் அதைப் பற்றிக் கேட்கிறே?”