பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இரக்கம்

419

"சந்தோஷத்துக்குக் கேக்கணுமா? கண்ணு போட்ட மாடு, குட்டி போட்ட ஆடு எல்லாத்தையும் வித்து ஐநூறு ரூபா எடுத்து கிட்டுப் பறந்து வந்தேன்!"

"ம்.........”

"சொன்னது சொன்னபடி குமாஸ்தா ஸ்டேஷனுக்கும் வந்திருந்தான்.....!"

"ம்......."

"கேட்டது கேட்டபடி நான் ஐநூறு ரூவாயை எடுத்து அவன் கையிலே கொடுத்தேன்"

"ஐயோ , பாவம்!"

"ரெண்டு பேருமாகச் சேர்ந்து இங்கே வந்தோம்......!"

"எங்கே வந்தீர்கள்?"

"இங்கேயேதான்!"

"ம்........."

அவன் என்னை வெளியே நிறுத்திப்பிட்டு, "கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்துகிட்டு இரு; அம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்து விட்டு ஒரு நிமிஷத்துல வயந்துட்றேன்"னு உள்ளே போனான். ஒரு நிமிசம்ரெண்டு நிமிசமாச்சு; ஒரு மணியாச்சு; இரண்டு மணியாச்சு; ஒருநாள் ரெண்டு நாளாச்சு, போனவன் போனவன்தான்; திரும்பி வரவேயில்லை!"

"அவன் எப்படி வருவான்?"

"அதுக்கப்புறம் என்னடான்னா, இங்கே வரவங்க போறவங்க எல்லாம் இது குலோப்ஜான் வீடில்லே, ஐ கோர்ட்டுன்னு சொல்லிச் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க!"

"அவர்கள் கிடக்கிறார்கள்! நீ வா, எதற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் எழுதிவைப்போம்!" என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றாள் சரளா. முரளியும் அவளைத் தொடர்ந்தான்.

போலீஸார் அவன் விலாசத்தை குறித்து வைத்துக் கொண்டு, "தகவல் கிடைத்ததும் தெரிவிக்கிறோம்" என்றார்கள்.