பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கொண்டு வா, நாயை!


ன்று என்னவோ தெரியவில்லை; கம்பெனிக்கு வந்ததும் வராததுமாயிருக்கும்போதே, "கொண்டு வா, நாயை!" என்று என்னை நோக்கி இரைந்து விட்டு, மடமடவென்று மாடிக்குப் போனார் முதலாளி.

முதலாளி என்றால், முதல் உள்ள முதலாளி இல்லை ; முதல் இல்லாத முதலாளி!

'முதல் இல்லாத முதலாளியும் இந்த உலகத்தில் உண்டா?' என்று நீங்கள் மூக்கின்மேல் விரலை வைக்காதீர்கள் உண்டு; வேறு எந்த உலகத்தில் இல்லா விட்டாலும் எங்கள் சினிமா உலகத்தில் நிச்சயம் உண்டு!

ஆனால், இந்த 'முதலாளி' என்ற 'பட்டம்' இருக்கிறதே, அது மற்ற முதலாளிகளுக்குப் பொருந்துவதை விட, எங்கள் முதலாளிகளுக்குத் தான் ரொம்ப ரொம்பப் பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா?- சொல்கிறேன் - முதலாளி என்ற பெயர் முதல் போடுபவரைக் குறிக்கவில்லை; முதலை ஆளுபவரைத்தான் குறிக்கிறது. எனவே, முதல் போடுபவர் ஒருவராயும், அந்த முதலை ஆளுபவர் இன்னொருவராயும் உள்ள எங்கள் 'சினிமா உலக'த்தில் முதலாளி என்ற பெயர் எங்களுடைய முதலாளிகளுக்குத்தானே கன கச்சிதமாகப் பொருந்துகிறது?

அத்தகு பெருமை வாய்ந்த முதலாளி தானே அன்றொரு நாள் இங்கிருந்த நாயை கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு வரச் சொன்னார்? இன்று அந்த நாய் இங்கே எதற்காம்?- என்னைக் கேட்டால் அது இங்கேயே இருந்திருக்கலாம் என்பேன்; அங்கே கொண்டு போய் விடுவதற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டது அது?

ஒன்றுமில்லை; அன்றிரவு பத்து மணிக்கு மேல் யாரோ ஓர் அம்மாள் அவரைத் தேடிக்கொண்டு வந்தார்களாம். 'அம்மாள்' என்றதும் 'வயது நாற்பதுக்கு மேலிருக்கும் போலிருக்கிறது!' என்று நீங்கள் 'குத்து மதிப்புப் போட்டு விடாதீர்கள்; தமக்கு வயது அறுபதானாலும் தம்மைத் தேடிவரும் பெண்களுக்குப் பதினாறு வயதுக்குமேல் போகக்கூடாது என்பது என் முதலாளியின் குறிக்கோள் - மனிதன் என்று ஒருவன் பிறந்து விட்டால் 'குறிக்கோள்'