பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருந்திய திருமணம்

523

"திடீர் ஐயமா, அது என்ன ஐயம்? தெரிவித்தால் விளக்குகிறேன்!”

இந்தச்சமயத்தில் கையில் விளக்கு மாற்றுடன் உள்ளே நுழைந்த வேலைக்காரி, "நான் இருக்கிறப்போ நீங்கள் ஏன்சாமி விளக்கணும்? கொஞ்சம் எழுந்திருங்க; நானே விளக்கிட்டுப் போயிடறேன்!" என்றாள்.

"அறிவற்ற மக்கள், ஆட்டு மந்தை யொத்த மக்கள்! என்று தம்மை மறந்து, தம்முடைய ஆதரவாளர்களை 'விமர்சனம்’ செய்தவாறே ஆசிரியர் அறிவழகனார் மாடிக்குச் சென்றார்; சிகாமணி அவரைப் பின் தொடர்ந்தான்.

“என்ன ஐயம், எடுத்தியம்புவாய்!”

"எந்தப் பழைய சடங்குகளையும், எந்தப் பழைய சம்பிரதாயங்களையும் திருந்தாத திருமணத்திலிருந்து நாம் ஒழிக்கப் பார்க்கிறோமோ, அதே சடங்குகளையும் அதே சம்பிரதாயங்களையும் திருந்திய திருமணத்தில் புதிய உருவில் நாம் புகுத்தப் பார்க்கிறோம் என்பது என் தந்தையாரின் கூற்றாயிருக்கிறது. அந்தக் கூற்றை நான் மறுப்பது எங்ங்னம்?"

"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"

"அது மட்டுமல்ல; திருந்திய திருமணத்தில் நீங்கள் இன்று வழங்கும் வாழ்த்துரை, திருந்தாத திருமணத்தில் அன்னையும் பிதாவும் ஆன்றோரும் சான்றோரும் அன்று வழங்கிய ஆசீர்வாதந்தானே? 'ஆசீர்வாத'த்தில் இல்லாத நம்பிக்கை ‘வாழ்த்துரை'யில் மட்டும் இருக்கலாமா? ஏன் இந்த வார்த்தைப் புரட்சி? இதனால் ஏற்படுமா வாழ்க்கைப் புரட்சி? என்றும் அவர் கடாவுகிறார். அதை நான் எதிர்ப்பது எங்ங்னம்?"

"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!'

"சிந்தித்தேன்! சிற்றறிவுக்கு எட்டவில்லை; பேரறிவைத் தேடி ஓடி வந்தேன். தங்களுக்கும் இது சிக்கலான கேள்விதானா? தங்களுக்கும் அது சிந்திக்க வேண்டிய கேள்விதானா?”

"ஆம் தம்பி, ஆம்!”

"முடிவு?"

"இந்த முடிவற்ற உலகத்தில் முடிவு காண நான் யார், நீ யார்? நடப்பது நடக்கும்; கிடைப்பது கிடைக்கும். உண்மையை உள்ளது உள்ளபடி உனக்கு மட்டும் சொல்கிறேன்; கேள்; கொள்கை எதுவா - -