பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலையும் வாழ்க்கையும்

ஒளிப்பதிவாளர் ஒன்பதாவது கொட்டாவியை விட்டு விட்டு, ஐந்தாவது காப்பியின் துணையுடன் பத்தாவது கொட்டாவியை விரட்டப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போது, 'மேக்-அப்' அறையை விட்டு வெளியேறிய குமாரி கும்கும், பாட்டி பவனாம்பாளுடன் 'செட்'டுக்குள்ளே பிரவேசித்தாள்.

அஜந்தாக் கொண்டை - அசல் அல்ல, போலி; அந்தக் கொண்டையைச் சுற்றிலும் முல்லை அரும்புகள் - அசல் அல்ல, போலி; காதன வோடிய கண்கள் - அசல் அல்ல, போலி; கனிவாய் இதழ்கள் - அசல் அல்ல, போலி...

ஒரு வேளை அவளுடைய வாழ்க்கையே போலியாயிருக்குமோ?

அதைப் பற்றி அவளும் சிந்தத்தில்லை; அவளுடைய அபிமானிகளும் சிந்தித்ததில்லை!

இயற்கை இரவில் ஒளி வீசும் நட்சத்திரத்துக்குப் போட்டியாகச் செயற்கை இரவில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரத்தைக் கண்டதும் படத் தயாரிப்பாளர் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, 'பரவாயில்லை; பத்து மணி கால்-ஷீட்டுக்குப் பன்னிரண்டு மணிக்கே வந்து விட்டாளே!' என்று திருப்தியுடன், “எங்கே டைரக்டர் சாரைக் காணோம்?" எனறு கேட்டுக் கொண்டே திரும்பினார்.

"இதோ, நான் தயார்!" என்று சொல்லிக் கொண்டே அவர் இருபத்தேழாவது சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, "குட் மார்னிங்" என்றார் நட்சத்திரத்தின் பக்கம் திரும்பி.

பதிலுக்குக் "குட்மார்னிங்" என்று சொல்லி விட்டு "எங்கே டைலாக்?" என்று நட்சத்திரம் திருவாய் மலர்ந்தருள "இதோ!"என்று "டைலாக் பை"லை எடுத்து நீட்டினார் உதவி டைரக்டர். அதை ஒரு நட்சத்திரப் பார்வை பார்த்துவிட்டு "சரி, இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள் கும்கும்.

"உங்களுடைய ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு செயலிலும் அன்புததும்ப வேண்டும். அதற்கு முதற்படியாக, யாரைக் கண்டதும் உங்களுடைய உள்ளத்தில் அன்பு சுரக்குமோ, பிரவாகம் - -