பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சண்டையும் சமாதானமும்

ஆம், அந்த 'முடிவில்லாத சண்டை' நடந்து கொண்டே தான் இருந்தது!

அவை இரண்டில் ஒன்று அழியும்வரை அந்தச் சண்டை தொடர்ந்து நடந்தாலும் - நடக்கட்டும்; நடக்கட்டும்; அவற்றின் அழிவைப் பார்த்தபிறகாவது மற்ற ஜீவராசிகளுக்குப் பலாத்காரத்தில் உள்ள நம்பிக்கை தொலையட்டும்!

நல்ல வேளை! நானும் ரங்கனைப் பின்பற்றியிருந்தால்?

சரி, கதையை முழுவதும்தான் கேளுங்களேன்!

நாங்கள் வசித்து வந்த மாந்தோப்பில் எங்களைப் போல் எத்தனையோ கிளிகள் வசித்து வந்தன. நானும் ரங்காவும் அடுத்தடுத்து இருந்த மரப் பொந்துகளில் வசித்து வந்தோம். எங்கள் தோப்புக்கு இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் ஒரு வெற்றிலைத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலிக்காக அகத்திச் செடிகள் வைக்கப்பட்டிருக்கும். பொழுது விடிந்ததும் எங்களையெல்லாம் அங்கு தான் பார்க்கலாம்; ஆடலும் பாடலுமாக ஒரே ஆனந்தத்தில் மூழ்கியிருப்போம்.

அந்தத் தோட்டத்தின் பக்கமாக எத்தனையோபேர்போவார்கள், வருவார்கள், அவர்களில் எத்தனை பேர் எங்கள் ஆடலிலும் பாடலிலும் தங்கள் மனதைப் பறிகொடுத்து நிற்பார்கள் என்கிறீர்கள்? - ஒரிருவர்தான்!

அந்த ஒரிருவரைப் போல் எல்லோருமே அழகை அனுபவிப்பவர்களாயிருந்தால் இந்த உலகம் இப்படியா இருக்கும்? நன்றாய்ச் சொன்னேன்! - அழகை அனுபவிக்காமலிருக் கிறார்களே, அவர்களால் மட்டுமா இந்த உலகத்தில் அமைதிக்குப் பங்கம் விளைகிறது? அழகை அனுபவிக்கிறார்களே, அவர்கள் கூடத்தான் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறார்கள்!

அது கிடக்கட்டும்; ஒரு நாள் வழக்கம் போல் வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்ற நாங்கள் இருவரும் உடனே வீடு திரும்பவில்லை. அதற்குக் காரணம் ரங்கா தான். அன்று என்னமோ அது இருந்தாற் போலிருந்து, "என்ன, சுகப்பிரம்மரே! இந்த