பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

564

விந்தன் கதைகள்

அன்புடன் தடவிக் கொடுக்க யத்தனிப்பாள். அதற்கு இடங் கொடுக்காமல் 'அல்லா' இப்படியும் அப்படியுமாகத் துள்ளித்துள்ளி ஒடி அவளை அலக்கழிக்கும்.

வேளைக்கு வேளை விதம் விதமான இரைகளை எடுத்துக் கொண்டு ஜிஜியாவின் தோழிகள் 'அல்லா'விடம் வருவார்கள். அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 'அல்லா', தோழிகள் மனமுடைந்து போய் விஷயத்தை ராணியிடம் தெரிவிப்பார்கள். அவளே நேரில் வருவாள். என்னவெல்லாமோ கொஞ்சி குலாவி ஒரு பிடி புல்லையாவது அதன் வாயில் திணித்துவிடப் பார்ப்பாள். 'அல்லா'வோ தன்னால் முடிந்தவரை வாயை இறுக மூடிக்கொண்டு தலையைத் திருப்பிக் கொள்ளும். இதனால் ராணி ஜிஜியா அடைந்த வேதனை கொஞ்சநஞ்மன்று. ஆனால் அந்தப் பாழும் ஆசை மட்டும் அவளை விடவேயில்லை.

இந்தக் காட்சிகளையெல்லாம் காராக் கிரகத்தின் ஜன்னல் மூலம் ஒருவாறு காணும் பாக்கியம் பெற்றிருந்த இஸா, ஒரு பக்கம் இன்பமும் இன்னொரு பக்கம்துன்பமும் அடைவான்.

இதயத்தோடு இதயம் ஒன்றிப்போயிருந்த இரு ஜீவன்களும் எத்தனையோ நாட்களை இப்படியே உணவின்றி உறக்கமின்றிக் கழித்துவிட்டன. ஆனால், பாதுஷா...?

அந்த இரு ஜீவன்களுக்குமிடையே இருக்கும் அன்பைத் தன் அதிகாரத் திமிரால், ஆயிரம் மோகராக்களால் பெற முடியாவிட்டாலும், சிறைப்படுத்திச் சித்திரவதை செய்வதன் மூலம் பெற்றுவிட முடியுமென்று நினைத்தான்!

இவர்களுக்கு மத்தியில் என்றைக்காவது ஒரு நாள் 'அல்லா'வின் உள்ளத்தில் தனக்கும் இடம் கிடைக்குமென்று எண்ணிப் பொறுமையுடன் நாளைக் கழித்து வந்தான் ஜிஜியா.

அன்று காலை வழக்கம் போல் நமாஸ் செய்து விட்டு ஜன்னலருகே வந்து நின்று 'அல்லா'வை நோக்கினான் இஸா. எந்த நேரமும் நிமிர்ந்து நின்று இஸாவின் வரைவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அல்லா அன்று ஏனோ தரையில் சோர்ந்து விழுந்து கிடந்தது!

கவி இலா, அரே அல்லா அரே அல்லா என்று கதறினான்.