பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று பொம்மைகள்

605

வந்துள்ள பொம்மைகளுக்கும் என்ன பொருத்தம் என்பதை நீயே பார்!" என்றார் அப்பா.

பையன் பார்த்தான் - நகைச்சுவையோடு செய்யப்பட்டிருந்த அந்த மூன்று பொம்மைகளும் குரங்குப் பொம்மைகள் - முதல் குரங்கு கண்ணைப் பொத்திக் கொண்டு இருந்தது; இரண்டாவது குரங்கு காதைப் பொத்திக் கொண்டு இருந்தது; மூன்றாவது குரங்கு வாயைப் பொத்திக் கொண்டு இருந்தது!

"சரி, இப்போது நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டான் பையன் ஒன்றும் புரியாமல்.

"ஒன்றும் செய்ய வேண்டாம்; நீ அவற்றைப் பின்பற்றி நடந்தால் போதும்!" என்றார் அப்பா.

பையன் ஒருகணம் யோசித்தான்; மறுகணம் "முடியாது அப்பா, முடியாது; அவற்றைப் பின்பற்றி நடக்க என்னால் முடியாது!" என்றான் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டே.

"ஏண்டா , முடியாது?"

"மொத்தம் ஆறு கைகள் அல்லவா அதற்கு வேண்டி யிருக்கின்றன? எனக்கு இருப்பதே இரண்டே இரண்டு கைகள்தானே, அப்பா? - வேண்டுமானால் என்னுடைய கைகளால் நான் கண்ணைப் பொத்திக் கொண்டு விடுகிறேன்; உங்களுடைய கைகளால் என் காதைப் பொத்துங்கள்; அம்மா தன்னுடைய கைகளால் என் வாயைப் பொத்தட்டும்!"

"பொத்துவேண்டா, பொத்துவேன்! அதைவிட வேறு என்ன வேலை, எனக்கு?" என்று சொல்லிக் கொண்டே அந்தச் சமயத்தில் அங்கே வந்த அஞ்சுகம், கையிலிருந்த காபியை மேசையின்மேல் வைத்துவிட்டுத் திரும்பினாள்.

"அவள் வாயைப் பொத்திக் கொள்வதற்கே அவளுடைய கைகள் போதாதேடா! உன் வாயைப் பொத்த அவள் கைகளுக்கு எங்கே போவாள்?" என்றார் ஆலாலசுந்தரம்.

"அப்படியானால் முடியாது, அப்பா! என்னால் அந்தப் பொம்மைகளைப் பின்பற்ற முடியவே முடியாது!" என்றான்பையன், அழுத்தந்திருத்தமாக.

"போடா முட்டாள்! அந்தப் பொம்மைகளைப் பின்பற்ற ஆறு கைகள் என்னத்துக்கு, அறிவிருந்தால் போதாதா? - இப்போது நான்