பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதாந்தம்

359

ஒத்துழைத்து வந்தான். இருந்தாலும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதே அது அடிக்கடி அவனை உறுத்தி வந்தது. தக்க சந்தர்ப்பம் வாய்த்ததும், அதாவது வயிற்றுக் கவலையைத் தீர்த்துக் கொள்ள வேறுவழி பிறந்ததும்-அவன் கருப்பையாவின் கடையிலிருந்து விலகிக் கொண்டு விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தான்.

தன்னுடைய முடிவை அவன் கருப்பையாவிடம் தெரிவித்தபோது, அவர் காரணம் என்னவென்று கேட்டார். அப்போதும் அவன் உண்மையை மறைக்க விரும்பவில்லை! தங்களுடைய காரியங்களில் ஒத்துழைக்க என் மனசாட்சி இடம் தரவில்லை!" என்றே சொல்லி விட்டான்.

இதைக் கேட்டதும் கருப்பையாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. "அடடே, உமக்கு மனசாட்சி வேறே இருக்கிறதா? இந்த விஷயம் முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தால், உம்மை வேலையிலேயே வைத்துக் கொண்டிருக்க மாட்டேன்!” என்றார்.

"எனக்கும் தங்களுக்கு மனசாட்சி இல்லை என்ற விஷயம் முதலிலேயே தெரிந்திருந்தால் உம்ம வேலையிலேயே சேர்ந்து கொண்டிருக்க மாட்டேன்! என்றான் சாமிக்கண்ணு.

அன்றைய தினத்திலிருந்து சாமிக்கண்ணுவைக் குறிப்பிட நேரும் போதெல்லாம் 'சத்தியகீர்த்தி சாமிக்கண்ணு' என்றே கருப்பையா குறிப்பிடுவது வழக்கம். அவன் விலகுவதற்கு நாலு நாட்கள் இருக்கும்போதுதான் கோபால சாமி அவனுக்குப் பதிலாக வந்து சேர்ந்தான். அந்த நாலு நாட்களில் அவன் எவ்வளவோ விஷயங்களை தெரிந்து வைத்திருந்தான், எனினும் கடையை திறக்கச் செல்லும் போது நூறு ரூபாய்ப் பணத்தை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விஷயம் மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே விழித்தது விழித்தபடி நின்றான்; நின்றது நின்றபடி யோசித்தான்.

"கருப்பையா பொறுமையிழந்து, கடிகாரம் உமக்காக ஓடாமல் இருக்குமா என்ன?" என்றார்.

கோபாலசாமிக்கு அப்போதுதான் கொஞ்சம் விஷயம் புரிந்தது. "யாராவது இந்த உபரிதானியங்களை வாங்காமல் விட்டுவிட்டால்....." என்று ஆரம்பித்தான்.

"யாராவது என்ன? நூற்றுக்கு எழுபத்தைந்துபேர் 'வேண்டாம்' என்றுதான் சொல்வார்கள். தண்ணீரில் வேகும் சோற்றுக்கே அவர்கள்