பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



370

விந்தன் கதைகள்

"தேவலையே; என்னைக் கண்டதும் எழுந்துகூட நிற்கிறீர்களே? என்னிடம் நீங்கள் இவ்வளவு மரியாதையாக நடந்து கொள்வீர்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்க வில்லை" என்றாள் உஷா.

அவள் சொன்னதை அவன் அனுபவிக்கவில்லை; எழுந்த இடத்திலேயே இருந்த மேஜையின்மேல் சிறிது நேரம் உட்கார்ந்து ஏதோ யோசித்தான். பிறகு கோட்டை எடுத்து மீண்டும் மாட்டிக் கொண்டு வெளியே போய்விட்டான்.

வழியில் ஏனோ உஷாவின் காதலை நினைத்து கரைந்தது ராஜகோபாலனின் உள்ளம்.

அவன் வெளியே போன பிறகு உஷாவின் உள்ளமும் வேதனையடைந்தது. "அவனுக்குத் தன்னைப் பிடிக்காத போது அவனிடம்தான் ஏன் விளையாட வேண்டும்?" என்று கூட அவள் நினைக்க ஆரம்பித்து விட்டாள்

இரவு மணி எட்டு இருக்கும். வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உஷா கண்ணிர் சிந்திக் கொண்டிருப்பதை ராஜகோபாலன் கண்டான். அவன் மனம் பேதலித்து விட்டது. "ஏன் அழுகிறாய், உஷா?" என்று உடனே கேட்டுவிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. ஆயினும் அவ்வளவு சீக்கிரத்தில் அவளிடம் தன்னை இழந்து விட விரும்பவில்லை; மெளனமாக உட்கார்ந்தான். உஷாவும் மெளனமாக எழுந்து வந்து, அவனுக்கு சாதம் பரிமாறினாள். அந்தச் சாதத்தோடு, சாதமாக, "ஏன் அழுகிறாய், உஷா?" என்று அவளைக் கேட்க வேண்டுமென்றிருந்த கேள்வியையும் சேர்த்து அவன் விழுங்கப் பார்த்தான். முடியவில்லை. கேட்டு விட்டான்.

"ஏன் அழுகிறாய், உஷா?”

அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவள். "ஒன்றுமில்லை!" என்று சொல்லிக் கொண்டே அப்பால் போய்விட்டாள்.

இந்த நிலையில் ரங்கநாதம் எதிர்பார்த்தபடி இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தான் விரும்பினர். ஆயினும் அவர் களுடைய காதலுக்கு இடையே ஏதோ ஒன்று இடையூறாக இருந்து வந்தது; அதுதான் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.

கடைசியாக அவர் என்ன நினைத்தாரோ என்னமோ, தமது மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானல் பங்களாவிற்கு சென்றார். அங்கிருந்து வந்த கல்யாணப் பத்திரிகை யொன்று உஷாவைத் தூக்கி வாரிப் போட்டது. 'சிரஞ்சீவி