பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுமணம்

391

"அதற்கென்ன மாமி, பரவாயில்லை" என்றாள் அவள். ராதையின் ஜூரம் நீங்குவதற்கு மூன்று வாரங்களாயின. அந்த மூன்று வாரங்களும் சீதா, ராதையுடனேயே இருந்தாள்.

"இந்தச் சமயத்தில்தான் என் மனத்தில் ஒரு சபலம் தட்டிற்று. ஏற்கெனவே சமூகச் சீர்திருத்தத்தில் பற்றுக் கொண்டிருந்த என் மனம் சீதாவை நாடியது-அவள் சம்மதிப்பாளா. அவள் சம்மதித்தாலும் அவளுடைய தாயார் சம்மதிப்பாளா?

யார் சம்மதிக்காவிட்டால் என்ன? என்னைப் பார்த்து அவளும், அவளைப் பார்த்து நானும் சம்மதித்தால் போதாதா?-இந்த அநித்தியமான உலகத்தில் பிறருடைய விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது?

ஒரு நாள் துணிந்து இந்த விஷயத்தை என் தாயாரிடம் வெளியிட்டேன்.

அவள் "சிவ சிவா!" என்று காதைப் பொத்திக் கொண்டு, 'ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது; இந்த மாதிரி இன்னொரு தரம் சொல்லாதே!' என்று சொல்லி விட்டாள்.

அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும், தாயாருக்குமிடையே பின்வரும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.

‘என்ன இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாதவீடு ஒரு வீடு ஆகுமா?"-இது என் அம்மா.

"ஏனாம்? இவரைவிட வயதானவர்கள், ஏழெட்டுப் பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?”

"இவன் என்னமோ சமூகத்தை சீர்திருத்திவிடப் போகிறானாம்; விதவைகளின் துயரத்தை தீர்த்துவிடப் போகிறானாம். அதற்காக இரண்டாந்தாரமாக கல்யாணம் செய்து கொள்வதென்றால் இவன் எவளாவது ஒரு விதவையைத்தான் கல்யாணம் செய்து கொள்வானாம். இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே எனக்கு வெட்கமாக யிருக்கிறது!"

"எந்த விதவை இவரைக் கல்யாணம் செய்து கொள்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்தப் புருஷர்கள்தான் 'விதவா விவாகம், விதவா விவாகம்’ என்று எப்போது பார்த்தாலும் அடித்துக்