பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நேற்று வந்தவள்

ன்று என் சகோதரி லலிதாவிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் எங்களுடைய தாம்பத்ய வாழ்க்கையில் அத்தகைய புயலைக் கிளப்பிவிடும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. லலிதாவும் அந்தக் கடிதத்தில் அப்படி யொன்றும் எழுதியிருக்கவில்லை. என்னையும், மன்னியையும் பார்க்க அவளுக்கு ஒரே ஆவலாயிருப்பதாயும் அதனால் என் வீட்டுக்கு வந்து பத்துநாட்கள் தங்கியிருக்கப் போவதாகவுந்தான் எழுதியிருந்தாள்-அடேயப்பா எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளுக்கு இந்த ஆவல் தோன்றியிருக்கிறது!

வரவே வருகிறாள்-இன்றோ அல்லது நேற்றோ வந்திருக்கக் கூடாதா? நாளைக்கு வருகிறாளாம். நான்தான் இன்றே ஒரு கேஸ் விஷயமாக வெளியூருக்குப் போக வேண்டியிருக்கிறதே?-திரும்பி வந்துதான் அவளைப் பார்க்கவேண்டும்-சரி, சரசுவிடம் சொல்லி விட்டாவது போவோமா?

"யார் அங்கே?"

"கொஞ்சம் இருங்கள்; பார்த்துச் சொல்கிறேன்?

நீ ஒன்றும் பார்த்துச் சொல்ல வேண்டாம்; கூப்பிடுவது உன்னைத்தான்!”

“என்ன வந்துவிட்டது, எனக்கு?"

"ஏன், ஒன்றுமில்லாததற்கெல்லாம் இப்படி அலுத்துக் கொள்கிறாய்?"

"இல்லையென்றால் இங்கே ஆனந்தம் பொங்கி வழிகிற தாக்கும்!"

"சரி, சரி எனக்கு முன்னாலேயே நீ இந்தக் கடிதத்தை படித்து விட்டாயாக்கும்?"

"இந்த வீட்டில் எனக்கு வேறு வேலை ஏதாவது உண்டா, என்ன?-உங்களுக்கு வரும் கடிதங்களையெல்லாம் படித்துக் கொண்டிருப்பதுதான் வேலை!"

"வீணாகப் பேச்சை வளர்த்து என் வெறுப்புக்கு ஏன் மேலும் மேலும் ஆளாகிறாய்? இதனால் நீயும் வாழ்க்கையில் சுகத்தைக்