பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

விந்தன் கதைகள்

"என்ன! அவ்வளவு மல் கிடைக்காதோ?”

"உனக்குக் கிடைக்காமலென்ன?-ஆனால் தற்சமயம் இங்கே அவ்வளவு மல் இல்லை; இரவு வேண்டுமானால் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!”

'சரி' என்று அவள் போய் விட்டாள்; நானும் "பிழைத்தேன்!"என்று பெருமூச்சு விட்டேன்.

அன்றிரவு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக என் அறையை நோக்கித் திடுதிடுவென்று நடந்து வந்தார் அப்பா; திடுக்கிட நான் எழுந்து நின்றேன்.

"அடேய்! அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ?"

"......"

"உன்னை யாரடா நான் சொன்னதற்கு மேல் விற்கச் சொன்னார்கள்?"

"......"

"இளம் பெண்ணைக் கண்டதும் இரக்கம் வந்து விட்டதோ?”

"ஐயோ! அவள் குழந்தை, அப்பா!"

"அவள் குந்தைதான்; அவளுடைய அக்கா?"

"இதென்ன வீண் பழி! யாரோ சொன்னதைக் கேட்டு....."

"சொன்னதைக் கேட்டு என்னடா? இப்படி என் தலையை மொட்டையடிக்க எத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தாய்?"

"அப்படி என்ன அப்பா, பிரமாதமாக மொட்டையடித்துவிட்டேன்? ஆறு கெஜம் மல்தானே?"

அவ்வளவுதான்; "ஓஹோ! எதிர்த்துப் பேசக் கூடத் தைரியம் வந்துவிட்டதா?-ம், நடடா வெளியே!" என்று என்னை ஓங்கி அறைந்தார் அவர். அதற்குள் அம்மா அலறிக் கொண்டே, ஓடிவந்து, "நன்றாயிருக்கிறது. ஏன் இப்படி அமர்க்களம் பண்ணுகிறீர்கள்? நீங்கள் சொன்னதற்குமேல் ஆறு கெஜம் மல்லை விற்றுவிட்டால் குடியா முழுகிப் போய்விடும்!" என்றாள்.

"மூடு, வாயை! இப்போது 'பீஸ்' ஒன்றுக்கு இருபது ரூபாய் விலை பேசி, இன்றிரவு இருபது 'பீஸ்' கொடுப்பதாக ராம்ஜியிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு வந்து விட்டேனே, அதற்கு நான் என்ன செய்வது?"