பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

"எவ்வளவு காலம் பொறுப்பது? - நானாவது அவர்களுக்காக நின்று தொலைக்கிறேனா? அதுவும் இல்லை; ஒடிக்கொண்டேயிருக்கிறேன்!”

"வேண்டுமானால் அவர்கள் ஒன்று செய்யலாமே? உங்களைத்தான் அவர்களால் நெருங்க முடியாது; நெருங்கினாலும் பிடித்து நிறுத்த முடியாது - கடிகாரத்தைக் கூடவா அவர்களால் நிறுத்த முடியாது?”

"வேடிக்கைதான்; அதை நிறுத்தினால்?"

"கனவு நனவாகும் வரை காலம் போகாமல் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் 'கலகல' வென்று நகைத்தாள் புகழரசி.

"அபூர்வமான யோசனைதான்!-பொழுது விடிய வேண்டாம் என்பதற்காக யாரோ ஒருத்தி சேவற் கோழியை எடுத்து ஒளித்து வைத்தாளாமே, அவள் கூடப் புத்திசாலித்தனத்துக்கு உன்னிடம் பிச்சை எடுக்க வேண்டும் போலிருக்கிறதே! - ஆனால் இந்த அருமை யான யோசனையை அவர்களிடம் நான் சொல்லக் கூடாது; நீதான் சொல்லவேண்டும்!" என்றான் கால தேவன்.

"நான்தான் உயிரோடிருக்கும் வரை அவர்களை நாடுவதே கிடையாதே!"

"அப்படியானால் அவர்கள் சொல்வது ரொம்ப சரி!"

"என்ன சொல்கிறார்கள்?"

"செத்தாரைத்தான் நீ வாழ வைப்பாய் என்று சொல் கிறார்கள்!"

"உண்மை; ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது!"

"என்ன காரணம்?"