பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


"வேண்டிய மட்டும் இருக்கும்-ஏனெனில் புகழினால் கர்வமடையும் கலைஞர்களுமுண்டு; பெருமையடையும் கலைஞர்களுமுண்டு. கர்வம் கலையைக் குலைக்கும்; பெருமை கலையை வளர்க்கும் - இது எப்படியானாலும் உயிரோடிருக்கும் போதே ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் புகழை உண்மையான புகழ் என்று ஜனங்கள் நம்ப மாட்டார்கள்!”

"ஏன் நம்பமாட்டார்கள்?"

"கலைஞன் உயிரோடிருக்கும்போது அவனுடைய குற்றங்கள் பெரிதாகவும், கலைத்திறன் சிறிதாகவும் ஜனங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே, என்னுடைய அருள் ஒரு கலைஞனுக்கு அவனுடைய ஜீவிய காலத்தில் நியாயமாகக் கிடைத்தாலும், ஏதோ காரியார்த்தமாக நாலு பேர் சேர்ந்து கொண்டு அவனைத்துக்கி விடுவதாக ஜனங்கள் புறம் பேசுகிறார்கள். அசூயையும் பொறா மையும் சேர்ந்து அவர்களுடைய உள்ளத்தை அவ்வாறு மாசுபடுத்தி விடுகின்றன!”

"சரி, கெட்டவர்களுடைய உள்ளத்தைத்தானே கெடுக்கும்? நல்லவர்களுடைய உள்ளத்தைக் கெடுக் காதே?"

"கட்டாயம் கெடுக்கும்; ஏனெனில் கெட்டவர் களோடு நல்லவர்களுடைய உள்ளத்தையும் சேர்த்துக் கெடுக்கக்கூடிய சக்தி அசூயைக்கும் பொறாமைக்கும் இருக்கிறது!"

"அதனால் என்ன? - ஜனங்கள் நம்பினால் நம்பட்டும். நம்பாவிட்டால் போகட்டுமே!"

"ஜனங்கள் நம்பவில்லையென்றால் கலைஞனுக்கு என்னால் கிடைத்த புகழினால் எந்த விதமான