பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



101

பெருமையும் இருக்காது. பெருமையற்ற புகழை ஒரு கலைஞன் அடைவதும் ஒன்றுதான்; அடையாம லிருப்பதும் ஒன்றுதான்!”

அதற்காகக் கலைஞர்கள் சாகும்வரை உன்னை நினைந்து உருகுவதா? அவர்கள்மேல் உனக்குக் கொஞ்ச மாவது இரக்கமே கிடையாதா?”

"இரக்கம் இருப்பதால்தான் மரணத்துக்குப் பின் அவர்களை நான் நாடுகிறேன்; மக்களின் அவ தூறிலிருந்து அவர்களைக் காக்கிறேன்; மங்காத புகழை அவர்களுக்கு அளிக்கிறேன்; என்னால் அவர்களுடைய பூதவுடல் கர்வமடையாமல் புகழுடல் பெருமையடைய வேண்டுமென்று விரும்புகிறேன்; அதன் பயனாகக் கலையைக் குலைக்காமல் வளர்க்கிறேன் - இந்த உண்மையை அறியாத கலைஞர்கள் சாகும் வரை என்னை நினைந்து உருக வேண்டியதே' என்று சொல்லி விட்டு, ஒடும் ரதத்திலிருந்து கீழே குதித்தாள் புகழரசி.

"அப்படியானால் அதுவரை அப்பாவிக் கலை ஞர்கள் என்னுடைய தலையை உருட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?” என்றான் காலதேவன் ஏமாற்றத்துடன்.

புகழரசி சிரித்துக் கொண்டே அவனுடைய பார்வை யிலிருந்து மறைந்தாள். அந்த உல்லாசக்காரியின் சிரிப்பொலி நெடுநேரம்வரை காலதேவனின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது!

荔,荔,荔