பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



105

பழக் கடைக்காரன் வந்தான்; சிறிய பழங்க ளெல்லாம் வெளியே வந்துவிட்டதற்குக் காரணம் என்ன வென்று கவனித்தான், கூடைக்கு அடியில் ஒரு பொத்தல் இருப்பது அவன் கண்ணில் பட்டது. உடனே அதை அடைத்து அவன் சிறிய பழங்களை எடுத்து மீண்டும் கூடைக்கு அடியில் போட்டான்; பெரிய பழங்களை எடுத்து அவற்றுக்கு மேலே அடுக்கினான்.

அவன் அடுக்கி முடித்ததும் சிறிய பழங்களில் ஒன்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொல்லிற்று:

"குறுக்கு வழியில் நாம் முன்னேற முயன்றது பலிக்க வில்லை; பெரிய பழங்களைப்போல முன்னேற வேண்டுமானால், நாமும் அவற்றைப் போல் பருத்தால் தான் முடியும் போலிருக்கிறது!”

號。浙。浙

66. நிதர்சனம்

எதையும் நம்பாதவனைப் பார்த்து, "குயில் கூவும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் ஒரு பெரியவர்.

"மாட்டேன்; கூவுவதைக் கேட்டால்தான் நம்புவேன்" என்றான் அவன்.

குயில் கூவிற்று; அவன் நம்பினான்.

"மயில் ஆடும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.

"மாட்டேன்; ஆடினால்தான் நம்புவேன்' என்றான் அவன்.