பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

3
ரு நாள், “உன்னை நான் தாங்காவிட்டால் நீ என்ன ஆவாய்?” என்று சுவர் என்னைக் கேட்டது.
“என்ன ஆவேன்? கீழே விழுவேன்!” என்றேன் நான்.

“நீ கீழே விழுந்தால் மனிதன் என்ன ஆவான்?”

“என்ன ஆவான்? மேலே போக முடியாமல் கீழேயே நிற்பான்!”

“அப்படியானால் மனிதனுக்கு நீ ஆதாரம், உனக்கு நான் ஆதாரம் இல்லையா?” என்றது சுவர்.

நான் சிரித்தேன்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று சுவர் கேட்டது.

“உனக்கு நான் ஆதாரமாக இருக்கலாம்; எனக்கு நீ ஆதாரமாக இருக்கலாம். நம் இருவருக்கும் ஆதாரம் மனிதன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றேன் நான்.

“தனக்கு ஆதாரம் கடவுள் என்பதை மனிதன் மறக்கும்போது நாம் ஏன் அவனை மறக்கக்கூடாது!” என்று என்னைத் திருப்பிக் கேட்டது சுவர்.

4

ஒருவன் மேலே ஏறிச் சென்றதும் முதல் வேலை யாக என்னைக் கீழே தள்ளிவிட்டான்.

அப்படியே சாய்ந்து கீழே விழுந்த நான், “இப்படிக் கூடச் செய்யலாமா, இது நியாயமா?” என்று கேட்டேன்.

“நியாயமாவது, அநியாயமாவது! அப்படிச் செய்யா விட்டால் மேலே வந்த பெருமையை நான்