பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

இதைக் கேட்டதும் காதலி தன்னை மறந்து சிரித்தாள்; காதலனும் சிரித்தான். அவர்கள் இருவரும் சிரித்ததைப் பார்த்துக் காதலியின் அப்பாவும் சிரித்து விட்டார்!

பலன்? - கலியாணத்தில்தான் முடிந்தது என்றாலும் அவர்கள் மட்டும் என்னை நினைக்கவா செய்கிறார்கள்? ஊஹும்!

6

என்னை வைத்து மேலே வந்த ஒருவனைப் பார்த்து, “நீங்கள் எப்படி மேலே வந்தீர்கள்”? என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்.

“உழைப்பு, உழைப்பு, கடும் உழைப்பு!” என்று அளந்தான் அவன்.

நான் சிரித்தேன்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டது என்னைத் தாங்கி நின்ற சுவர்.

'“நாம் இருவரும் இங்கே இருப்பது மேலே போனவனுக்குத்தான் தெரியவில்லையென்றால் அந்தப் பத்திரிகை நிருபருக்கும் தெரியவில்லையே, அதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்!” என்றேன் நான்.

7

இரவு நேரம்; என்னைத் தூக்கிக்கொண்டு ஒருவன் முன்னால் செல்ல, இன்னொருவன் தலையில் நூற்றுக்கணக்கான வண்ணப் போஸ்டர்களுடனும், ஒரு வாளி கூழுடனும் அவனுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தான். இருவரும் போஸ்டர் ஒட்டுவதற்