பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

“அந்த நூறு வண்ணப் போஸ்டர்களை அச்சிட்டவனுக்கு இருநூறு ரூபாயாவது செலவாகியிருக்குமல்லவா?” என்றான் முன்னவன், தன் படுக்கையை எடுத்து விரித்துக்கொண்டே.

“அந்தக் கணக்கைச் செட்டியாரே பார்க்காத போது நாம் ஏண்டா, பார்க்கணும்?” என்றான் முன்னவன்.

“அதில் அவருக்கு லாபம், அதனால் பார்க்கவில்லை!”

“நமக்கு மட்டும் நஷ்டமா? வேலைக்கு வேலையும் மிச்சமாச்சு, ரெண்டு ரூபாய் நாஸ்தாவுக்கும் ஆச்சே! அது லாபமில்லையா?”

“இப்படியே அவனவன் லாபத்தை அவனவன் பார்த்துக் கொண்டே போனால்...” என்று பின்னவன் இழுத்தான். “

அதுதான் உலகம்! பிறத்தியான் நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படறவனுக்கு இந்தக் காலத்திலே 'பிழைக்கத் தெரியாதவன்'னு பேருடா முட்டாள், நீ தூங்கு!” என்றான் முன்னவன்.