பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

“என்னைப்போல் இந்த உலகை ஒளி மயமாக்க முடியுமா, உன்னால்?” என்று அதைத் திருப்பிக் கேட்டான் கதிரவன்.

“முடியாது அப்பனே, முடியாது!” என்று காற்று கையை விரித்தது. “அப்படியானால் நீயும் என்னை வழிபடு, ஏற்றுக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, இன்னும் மேலே மேலே சென்றான் கதிரவன்.

“வழிபடுகிறேன்; பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்து ஒட உன்னை நான் நீ சொல்வதற்கு முன்னால் வழிபடுகிறேன்!” என்று அவனை வழிபட்டுக் கொண்டே வந்தது மழை.

“அதுதான் சரி; அதுதான் சரி!” என்று அதன் பக்திப் பிரவாகத்தில் அப்படியே உச்சி குளிர்ந்து போனான் கதிரவன்!

ந்தி மயங்கிற்று; “அஸ்தமிக்க வேண்டியதுதான், தான் அஸ்தமித்ததும் இந்த உலகமே அஸ்தமிக்க வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொண்டே, மலை வாயை அடைந்தான் கதிரவன். “ அஸ்தமிக்காது அப்பனே, யார் அஸ்தமித்தாலும் இந்த உலகம் அஸ்தமிக்காது!” என்றது மலை. “ வேடிக்கையாயிருக்கிறதே, நீ சொல்வது என்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள், இந்த உலகை ஒளி மயமாக்க” என்று கதிரவன் கேட்டான். “ அதோ பார், அந்தக் குடிசையை!” என்றது மலை.

கதிரவன் பார்த்தான்; ஆரவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒர் அகல் விளக்கு தன்னால் முடிந்தவரை அந்தக் குடிசையை ஒளி மயமாக்கிக் கொண்டிருந்தது!