பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் எப்போது ‘இது உன்னுடையது, அது என்னுடையது’ என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தானோ, அப்போதே அவனுக்கு இங்கே எதுவுமே உரிமையில்லாமல் போய்விட்டது!”

✽✽✽

6. விஞ்ஞானி

ந்த உலகத்தில் இனி யாரும் எனக்கு இணையில்லை, என்னால் முடியாத காரியமும் இல்லை!” என்றான் ஒருவன்.

“யாரப்பா, நீ?” என்று அவனைக் கேட்டார் ஒரு பெரியவர்.

“என்னைத் தெரியவில்லையா? நான்தான் இந்த உலகத்தின் அஞ்ஞான இருளைப் போக்கிக் கொண்டிருக்கும் விஞ்ஞானி!” என்றான் அவன் அட்டகாசமாக.

“அப்படியா?” என்று தலையை ஆட்டிக்கொண்டே தமக்கு அருகிலிருந்த ரோஜாச் செடியிலிருந்து, ஒரு மொட்டைப் பறித்து அவனிடம் கொடுத்து, “எங்கே, இல்தைக் கொஞ்சம் மலர வையப்பா பார்ப்போம், உன் விஞ்ஞானத்தால்?” என்றார் பெரியவர் அமைதியாக.

“பூ! இதென்ன பிரமாதம்” என்று அதை அலட்சியமாக வாங்கி முகர்ந்துகொண்டே தன் ரசாயன அறைக்குள் நுழைந்தான் அவன். அங்கே என்ன முயன்றும் அந்த மொட்டு அவன் எதிர்பார்த்தபடி அவ்வளவு இயற்கையாக மலரவில்லை; அதற்காகப் பொறுமை இழந்து அவனும் அதை விட்டுவிடவில்லை.

கு.க-2