பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2O

"என்ன நிபந்தனை?”

"நான் உம்முடன் வருவதற்கு முன்னால் நீர் என்னுடன் வர வேண்டும்!"

"எங்கே?"

"ஊருக்கு!"

“எதற்காக?"

"நீர் நல்லவரா, கெட்டவரா என்பதை நான் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிந்துகொள்வதற்காக!" என்று சொல்லிக்கொண்டே ஆடு நடந்தது. அதற்குமேல் ஒநாய் என்ன செய்யும், பாவம் ஆசை முன்னால் தள்ள, அச்சம் பின்னால் இழுக்க, 'சரி, வருகிறேன்!” என்று அக்கம் பக்கம் பார்த்துகொண்டே அதைத் தொடர்ந்தது.

ஊரின் எல்லையை மிதித்ததுதான் தாமதம், "இப்போதாவது தெரிந்துகொண்டாயா, நான் நல்லவனா இல்லையா என்பதை? வா, சீக்கிரம் வா!" என்று காட்டைக் காட்டி, அவசர அவசரமாக ஆட்டை அழைத்தது ஒநாய்.

"நல்லவர்கள் காட்டிலே வாழ்வானேன், நாட்டி லேயே வாழலாமே?" என்றது ஆடு, நின்ற இடத்தி லேயே நின்று.

இந்தச் சமயத்தில் குப்பைமேட்டை மொய்த்துக் கொண்டிருந்த கோழிகள் தன்னைக் கண்டதும் கொக் கரித்துக்கொண்டே ஓடி ஒளிய, "பார்த்தாயா, உங்கள் நாட்டிலே கெட்டவர்கள் மலிந்து கிடப்பதை?" என்று பேச்சை மாற்றிப் பார்த்தது ஒநாய்.

"கெட்டவர்களா, யார் அவர்கள்?" என்று ஆடு கேட்டது.

"என்னைக் கண்டதும் கோழைகள்போல் ஓடி ஒளியும் அந்தக் கோழிகளைத்தான் சொல்கிறேன்!” என்றது.ஒநாய்.