பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


“என்ன?" என்று கேட்டது மரகதம்.

"முடியவில்லை அப்பனே, முடியவில்லை; என்னாலும் அவனைத் திருப்தி செய்ய முடியவில்லை!" என்று அதுவும் கையை விரித்தது.

இப்படியே ஒன்பது ரத்தினங்களும் சென்று தோல்வி யுற்றுத் திரும்பிய பிறகு, "நான் திருப்திப்படுத்துகிறேன் அவனை என்றது ஒரு குரல்.

"அது யாரப்பா, அது?" என்று எல்லா ரத்தினங்களும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பின.

"நான்தான் பத்தாவது ரத்தினம், அப்பா!" என்றது அது.

"பத்தாவது ரத்தினமா, பைத்தியம் பிடித்த ரத்தினமா?" என்று மரகதம் கேட்டது.

"வீண் பேச்சு எதற்கு வேண்டுமானால் என்னை அனுப்பிப் பார்!" என்றது அது.

"சரி, வா போவோம்!" என்றது மரகதம்.

"நீங்களும் என்னுடன் வருகிறீர்களா,என்ன?" என்று கேட்டது. அது.

"ஆமாம், உன்னுடைய லட்சணத்தைப் பார்க்க வேண்டாமா?" என்றது கோமேதகம்.

"சரி, வாருங்கள்!" என்று பத்தாவது ரத்தினம் கிள்ம்ப, மற்ற ஒன்பது ரத்தினங்களும் அதைப் பின் தொடர்ந்தன.

பாவம் மனிதன், பத்தாவது ரத்தினம் அவனுக்கு முன்னாலிருந்த இலையில் கொட்டு, கொட்டு என்று கொட்டியதுதான் தாமதம், "போதும், போதும்" என்று அலறவே ஆரம்பித்துவிட்டான்!