பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


"தேவலையே! உன் பெயர் என்னப்பா?" என்று தன் எண் சாண் உடம்பையும் ஒரு சாணாகக் குறுக்கிக் கொண்டு கேட்டது மரகதம்.

"ஜீவரத்தினம் 'அரிசி' என்றும் 'அன்னம்’ என்றும் கூட அடியேனை அழைப்பதுண்டு!" என்றது அது.

荔,莎,荔

9. சாட்சி

வழக்கம்போல் அன்றும் தன் காதலியை யாரும் காணாத இடத்தில் சந்தித்தான் காதலன்.

"கடைசிவரை என்னை நீங்கள் கைவிட மாட்டீர் களே?" என்றாள் அவள்.

"உன்னையாவது, கைவிடுவதாவது? இந்த ஜன்மத்தில் இல்லை!"என்றான்.அவன்.

"உண்மையாகவா?”

"சந்திர சூரியர் சாட்சியாகச் சொல்கிறேன், இது சத்தியம்! ஆகாசவாணி பூமாதேவி சாட்சியாகச் சொல்கிறேன், இது சத்தியம்" என்று கைமேல் கையாக அடித்துக் கொடுத்தான் அவன்.

"அதைவிட யாராவது ஒரு புரோகிதரையோ, பதிவாளரையோ சாட்சியாக வைத்துக்கொண்டால்?" என்றாள் அவள்.

"நிலையான சாட்சி இருக்கும்போது நிலையற்ற சாட்சி நமக்கு ஏன் கண்ணே?" என்று காதலன் உருகினான்.