பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


"நிலையற்ற நமக்கு நிலையான சாட்சி ஏன் கண்ணாளா?" என்று காதலி ஊடினாள்.

அவ்வளவுதான்; அன்று போனவனை அதற்குப் பின் அவள் பார்க்கவேயில்லை!

荔,荔,荡

10. வெற்றி

"உலகமே உலகமே! இன்னும் நீ ஏன் உருப்பட வில்லை?" என்றான் மனிதன்.

“எல்லாம் உன்னால்தான்!” என்றது உலகம்.

"என்னாலா!"

"ஆம்; உன்னால்தான்! உன்னுடைய பலவீனத்தால் தான்!” என்று அடித்துச் சொல்லிற்று உலகம்.

மனிதன் சிரித்தான்; "ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டது உலகம்.

"உன்னுடைய அறியாமைக்காகத்தான் சிரிக் கிறேன்!” என்றான் மனிதன்.

"என்னுடைய அறியாமைக்காகவா?”

"ஆம். மண்ணை நான் வென்றிருக்கிறேன்; விண்ணை நான் வென்றிருக்கிறேன்; காற்றை நான் வென்றிருக்கிறேன்; நெருப்பை நான் வென்றிருக் கிறேன்; கடவுளையே நான் பல விஷயங்களில் வென்றிருக்கிறேன். அப்படியிருக்க என்னை நீ பலவீனன் என்கிறாயே, உன்னுடைய புத்திசாலித் தனத்தை என்னவென்று சொல்ல?" என்றான் மனிதன்.