பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


"அநியாயம், அக்கிரமம்! நீதிமானான நீகூடவா வலியவனைத் தாழ்த்தி, எளியவனை உயர்த்திக் காட்டுவது?" என்று தங்கம் பொருமிற்று.

"அவசரப்படாதே, என்னுடைய முள்ளைக் கவனி!” என்றது தராசு.

முள்ளைக் கவனித்த தங்கத்தின் முகம் மலர்ந்தது. ஏனெனில், அது எளியவன் பக்கம் சாயவில்லை; வலியவன் பக்கமே சாய்ந்திருந்தது!

院。浙。浙

16. அகம்பாவம்

"விர், விர்ர்!" என்று பறந்தது ஒரு கரப்பான்.

"இந்த வீட்டில் எங்கேயோ தேள் இருக்கிறது; அதனால்தான் கரப்பான் பறக்கிறது!" என்றார் அந்த வீட்டுப் பெரியவர், அதை விரட்டிக்கொண்டே.

அதை விரும்பாத தேள், "நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பார்கள்; அதே மாதிரி நீயும் கொழுத்தால் ஒரு மூலையில் இருக்க மாட்டாய் போலிருக்கிறது!" என்றது தனக்கருகே வந்து அமர்ந்த கரப்பானிடம்.

"இல்லாவிட்டால் இந்த வீட்டில் நான் ஒருவன் இருக்கிறேன் என்பது எப்படித் தெரிவதாம்?" என்றது கரப்பான், அதைப் பொருட்படுத்தாமல்.

"அப்படியா சங்கதி?" என்று தேள் அதை ஒரு கொட்டு கொட்டிற்று.

துடியாய்த் துடித்த கரப்பான் அழுதுகொண்டே கேட்டது: