பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


"ஓ! அதைச் சுற்றி வைத்திருக்கும் அந்த மெல்லிய வெள்ளைக் காகிதத்தைச் சொல்கிறாயா? ஆமாம் ஆமாம், அதற்கு எப்போதுமே ஒரு தனி அலங்காரம் தான்!” என்று அது சொன்னதை திராட்சை ஆமோ தித்தது.

"ஏன், இருக்கக் கூடாதா? அது உன்னைப்போல் கன்னங்கரேலென்றா இருக்கிறது? எப்போதுமே அது தன் அழகிலும் தனி, மதிப்பிலும் தனி!" என்றது அன்னாசி.

மாதுளை திரும்பி, "யாரது, பைன் ஆப்பிள் ஸாரா? யு ஆர் கரெக்ட் முள்ளம் பன்றிபோல் இருக்கும் உமக்குச் சாதாரண பன்றிபோல் இருக்கும் ஆப்பிள் தன் அழகிலும் தனியாய்த்தான் தெரியும், மதிப்பிலும் தனியாய்த்தான் தெரியும்" என்றது எரிச்சலுடன்.

அப்போது அழுகிப்போன ஆரஞ்சுப்பழம் ஒன்றோடு, கன்றிப்போன ஆப்பிள் பழம் ஒன்றையும் எடுத்துக் கடைக்காரன் குப்பைத் தொட்டியில் விட்டெறிய, "வாழ்க, சமதர்மம்" என்றது வாழைப் பழம்.

"நாசமாய்ப் போச்சு வாழும்போது இல்லாத சமதர்மம் சாகும்போது எதற்காம்?" என்றது ஆரஞ்சு.

"ஸ், பேசாதே மனிதர்களுக்குச் சமதர்மம் சுடு காட்டில் கிட்டுவதுபோல, நமக்குக் குப்பைத் தொட்டியி லாவது கிட்டட்டும்!" என்று சொல்லி, அதன் வாயை அடக்கிற்று திராட்சை.

號。浙。浙