பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


"போதும், யாராவ்து கேட்டால் சிரிக்கப் போகி றார்கள்!" என்று மலர் ஊடிற்று.

"யார் சிரித்தால் என்ன, அந்தச் சிரிப்பெல்லாம் உன் சிரிப்புக்கு ஈடாகுமா?" என்று வண்டு அதைக் கூட நெருங்கிற்று.

மலர் பொறுமை இழந்து, "யாரை ஏமாற்ற இந்தப் பேச்செல்லாம்?" என்று கடுகடுத்தது.

"ஐயோ, இது அபாண்டம் யுகம் யுகமாக உன்னைக் காதலிக்கும் நானாவது, உன்னை ஏமாற்றுவதாவது?" என்றது வண்டு, பரிதாபமாக.

மலர் சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது வண்டு.

"ஒன்றுமில்லை, என்னை நீ ஏன் காதலிக் கிறாயாம்?" என்றது மலர் கேலியாக.

"இது என்ன கேள்வி, உன்மேல் கொண்ட அன்புக் காக!" என்றது வண்டு.

'ம், அப்புறம்?”

"நீ இல்லாமல் நான் வாழ முடியாது என்பதற்காக!"

"உண்மையாகவா?"

"சத்தியமாக!"

"இந்தச் சத்தியத்துக்கு மேல் மலர் தன்னைக் கேட்ப தற்கு என்ன இருக்கிறது?" என்று நினைத்த வண்டு, மறுபடியும் அதை மெல்ல நெருங்கிற்று.

“எட்டி நில்!” என்றது அது.

"ஏன்?" என்று கேட்டது இது.

"பொய்; நீ சொன்னவை யனைத்தும் சுத்தப் பொய்!”

"பொய்யா!'