பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


விடுவதுமாக இருக்கிறேன். ஒரு நாளாவது நீ என்னை, 'நான் எங்கிருந்து வருகிறேன், எங்கே போகிறேன்? என்று கேட்கவில்லையே, ஏன்?' என்று கேட்டது பனித்துளி.

மூங்கில் இலை முறுவலுடன் சொல்லிற்று:

"நீ எங்கிருந்து வந்தால் என்ன, எங்கே போனால் என்ன? பகலெல்லாம் வெம்மையின் துன்பத்தை அனுப விக்கும் எனக்கு, இரவின் குளுமையிலே ஒரு சிறிது நேரமே இன்பம் அளிக்க வருகிறாய் நீ! அந்த இன்பத்தையும் எனக்குத் தேவையில்லாத தத்துவ விசாரணையில் இறங்கி நான் ஏன் இழக்க வேண்டும்?"

務。號,渤

30. முடிவு

நடந்து போய்க்கொண்டிருந்த பாதசாரியின் காலில் 'நறுக்கென்று தைத்தது ஒரு முள். 'அப்பப்பா!' என்று காலைத் தூக்கி ஆடிக்கொண்டே சென்று, அருகிலிருந்த ஒரு மேடையின்மேல் உட்கார்ந்தார் அவர்.

"பார்த்து வந்திருக்கக்கூடாதா, லார்?" என்றார் வழியே போய்க்கொண்டிருந்த ஒருவர்.

"வந்திருக்கலாம், நான் வருவதற்கு முன்பே நீங்கள் சொல்லியிருந்தால்!" என்று சொல்லி, அந்த அனுதாபியை விறைப்புடன் செல்ல விட்டுவிட்டுக் காலில் தைத்த முள்ளைக் கையால் எடுக்க முயன்றார் அவர் முடியவில்லை. சுற்று முற்றும் பார்த்தார்; சற்றுத் துரத்தில் இருந்த இன்னொரு முள் அவருடைய