பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


கவனத்தைக் கவர்ந்தது. எடுத்தார்; எடுத்த முள்ளின் உதவியைக் கொண்டு தைத்த முள்ளையும் எடுத்தார். இரண்டையும் கொண்டுபோய்ப் பக்கத்திலிருந்த சாக் கடையில் போட்டுவிட்டு மேலே நடந்தார்.

அவருடைய தலை மறைந்ததும், 'தைத்தவன் நீ, எடுத்தவன் நான்! ஆனால் உனக்குக் கிடைத்த கதி தானே எனக்கும் கிடைத்திருக்கிறது?' என்றது எடுத்த முள்.

தைத்த முள் சொல்லிற்று:

"செயலில் வேறுபட்டு இருந்தாலும் இனத்தில் ஒன்றுபட்டல்லவா இருக்கிறோம் நாம்? அதனால்தான் நமக்கு இந்தக் கதி!"

荔,荔,荔

31. சுதந்திரம்

கட்டுண்டு கிடந்த நாய் ஒன்று, அந்தக் கட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒரு நாள் ஏக ரகளை செய்துகொண்டிருந்தது.

"அமைதி, அமைதி!" என்றது, அதற்கு எதிர்த்தாற் போல் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கிளி.

"அமைதியாவது, அமைதி! இந்த அடிமை வாழ்வி லிருந்து விடுதலை பெறும்வரை இனி எனக்கு அமைதி என்பதே கிடையாது!" என்றது நாய்.

"அந்த நாளைத்தான் நானும் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால்......" "ஆனால் என்ன?”