பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


"மூன்றாவது பேர்வழியின் துணையில்லாமல் அது அவ்வளவு எளிதில் முடியாது போலிருக்கிறதே? என்றது கிளி.

"அதற்கு யாரைத் தேடுவதாம்?" என்றது நாய், அவ நம்பிக்கையுடன்.

அப்போது அங்கே வந்த ஒரு குரங்கு, "நீங்கள் விரும்பினால் உங்களுக்கு நான் உதவத் தயார்" என்றது.

"நன்றி; உங்கள் உதவியை நாங்கள் அகமும் முகமும் ஒருங்கே மலர வரவேற்கிறோம்!" என்றன, நாயும் கிளியும் ஏக காலத்தில்.

அவ்வளவுதான்; அடுத்த நிமிஷமே நாயை அவிழ்த்துவிட்ட குரங்கு, கிளியின் கூண்டையும் திறந்தது.

"விடுதலை, விடுதலை!" என்று கூவிக்கொண்டே வான வீதியில் சிறகடித்துப் பறந்தது கிளி; "சுதந்திரம்; சுதந்திரம்' என்று ஆனந்தக் கூத்து ஆடிக்கொண்டே, ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தது நாய்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னால் விடுதலை செய்யப்பட்ட கிளியைச் சந்தித்த குரங்கு, “எப்படி இருக்கிறது, விடுதலை?” என்று கேட்டது.

"ஆனந்தம், பரமானந்தம்" என்றது கிளி, கன குவியுடன்.

"மகிழ்ச்சி!" என்ற குரங்கு, அதனுடன் விடுதலை செய்யப்பட்ட நாயை நோக்கி, "எப்படி இருக்கிறது, சுதந்திரம்?" என்று கேட்டது.

"சுத்த மோசம் காலையில் பால், மத்தியானம் இறைச்சி, மாலையில் பிஸ்கெட், இரவு மறுபடியும் பால்-இதெல்லாம் இந்தச் சுதந்திர வாழ்வில் எங்கே கிடைக்கிறது? ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும்