பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


அடிபட்ட குதிரை ஆற்றாமையுடன் சொல்லிற்று: "அட கடவுளே! இந்த மனிதர்கள் பொய்யில்தான் கலையழகைக் காண்பார்கள் என்று இதற்கு முன்னால் எனக்குத் தெரியாமற் போச்சே!”

荔,荔,渤

34. தியாகம்

ஆற்றங்கரை ஓரத்திலிருந்த ஒரு கல்லின்மேல் தான் கொண்டு வந்திருந்த அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான் ஒரு சலவைத் தொழிலாளி.

"அழுக்கடைவது துணி, அதை வெளுக்கும்போது அடிபடுவது நீ. ஆஹா, உன் தியாகமே தியாகம்!" என்று கல்லைப் புகழ்ந்தது கழுதை.

"மன்னியுங்கள்; துணி வெளுக்கப்படும்போது நானும் வெளுக்கப்படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்!" என்றது கல், உண்மையை மறைக்க விரும்பாமல்.

அசடு வழிந்த கழுதை ஆற்றைப் பார்க்க, அது கல்லைப் பார்த்து முணுமுணுத்தது:

"பிழைக்கத் தெரியாத தியாகி, பிழைக்கத் தெரியாத தியாகி"

莎,荔,荔

கு.க-4