பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


"ஆட்டையும் மாட்டையும் அடித்துத் தின்பவன் கூட அல்லவா. பஞ்சமா பாதகத்தில் நானும் சேர்ந்தவன் என்று என்னை இழிவு படுத்துகிறான்!” என்றது கொலை.

“எல்லாம் அநாகரிகம், அநாகரிகம் என்கிறார்களே, அந்த அநாகரிகத்தால் வந்த வினை! இல்லாவிட்டால் அதற்கு அஞ்சி எத்தனையோ விஷயங்களில் மனிதர் களைத் தடுத்தாட் கொள்ளும் என்னையும் அவர்கள் அந்தப் பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகச் சேர்ந்திருப் பார்களா?" என்றது பொய்.

“என்னை மறந்துவிட்டீர்களே?' என்றது சூது. "உன்னை மட்டுமா, என்னையும்தான்!” என்றது களவு.

இந்தச் சமயத்தில், "அஞ்சற்க!" என்று யாரோ அபயம் அளிப்பது போலிருக்கவே, 'யார் அந்தப் புண்ணியவான்?' என்று கேட்டுக்கொண்டே, ஐந்து மகாப் பாதகங்களும் ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தன.

"இப்போதுதான் எந்தப் பாதகமாயிருந்தாலும் அதை என் பேரால் செய்வது வழக்கமாகிவிட்டதே! உங்களுக்கு ஏன் அந்தக் கவலை ? விடுக!" என்று அவற்றைத் தடுத்தாட் கொண்டது நாகரிகம்!

荔,荔,荡

37. கவலை

ஒரு நாள் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்த பட்ட மரத்தை நோக்கி, "ஏன் ஒரு மாதிரியா யிருக்கிறாய்? என்ன கவலை, உனக்கு?" என்று கேட்டது பச்சை மரம்.