பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


"அதை ஏன் கேட்கிறாய், போ! ஒரு காலத்தில் உன்னைப்போல் இருந்தவன்தானே நானும்? இன்று எப்படி ஆகிவிட்டேன், பார்த்தாயா? அதை நினைத்தால் எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது!" என்று பட்டமரம் சொல்லிற்று.

இதைக் கேட்ட பச்சை மரம் பெருமூச்சு விட்டது. அதைப் பார்த்த பட்டமரம் கேட்டது:

"நீ ஏன் பெருமூச்சு விடுகிறாய்? உனக்கென்ன கவலை, இப்போது?"

பச்சை மரம் சொல்லிற்று:

"என்றாவது ஒரு நாள் உன்னைப்போல்தானே நானும் ஆகிவிடப் போகிறேன்? அதை நினைத்தால் எனக்கும் ஒரே கவலையாயிருக்கிறது!"

荔,荔,荔

38. சமாதானம்

நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஒர் எச்சில் இலைகூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு. அப்படியே கிடைத்தாலும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு அதைத் தின்ன முடியவில்லை அதனால். ஆகவே பசி ஒரு பக்கமும், வயோதிகத்தால் ஏற்பட்ட வாட்டம் இன்னொரு பக்கமு மாக அது ஒரு நாள் வீதி வழியே தளர் நடை நடந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது அதற்கு முன்னால் ஒர் எச்சில் இலை வந்து விழ, அதற்காக அந்தக் கிழட்டு நாயை முந்திக் கொண்டு ஏழெட்டு நாய்கள் ஓடி வந்து சண்டையிட, "நில்லுங்கள் சகோதரர்களே, நில்லுங்கள்! கேவலம் ஒர்