பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


எச்சில் இலைக்காக ஒரே இனத்தைச் சேர்ந்த நாம் இப்படியா சண்டையிட்டுக் கொள்வது? வெட்கம்! வெட்கம்!" என்றது அது வேதனையுடன்.

அதைக் கேட்டு மற்ற நாய்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்க, அதுதான் சமயமென்று கிழட்டு நாய் அந்த எச்சில் இலையைக் காலி செய்துவிட்டு, "வாழ்க, சமாதானம்" என்றது, சற்றே வாட்டம் தணிந்து.

அதுவரை அதைக் கவனித்துக்கொண்டிருந்த மற்ற நாய்களில் ஒன்று பெருமூச்சுடன் சொல்லிற்று:

"சமாதானத்துக்கு எப்போது வாழ்த்துக் கூற வேண்டுமென்று இப்போதல்லவா தெரிகிறது, எனக்கு!"

號。號。撈

39. வீரம்

'லொடுக்கிட்டி, லொடுக்கிட்டி என்று ஆடி அசைந்து சென்றுகொண்டிருந்தது ஒரு மாட்டு வண்டி.

அந்த வண்டிக்குப் பின்னால் கன வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு கார், "ஏய், சனியனே! ஒதுங்கிப் போ!' என்று அதை மிரட்டி விரட்டிற்று.

"மரியாதைக் குறைவாகப் பேசாதே! என்ன இருந்தாலும் உனக்கு நான் மூத்தவன் என்பதை மறந்து விடாதே" என்றது மாட்டு வண்டி.

"மூத்தவனாவது, கீத்தவனாவது யாராயிருந்தாலும் என்னைக் கண்டதும் ஒதுங்கி வழி விட்டால்தான் ஆச்சு; இல்லாவிட்டால் அவர்களை நான் மோதி மிதித்து விடுவேனாக்கும்!" என்று கார் உறுமிற்று.