பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41. பெண்ணின் பெருமை

"ரங்கா, ரங்கா, ரங்கா......!"
"ரங்கா, ரங்கா, ரங்கா!"
"அக்கா, அக்கா, அக்கா......!"
"அக்கா, அக்கா, அக்கா!"
"திருடன், திருடன், திருடன்......!"
"திருடன், திருடன், திருடன்!”
"அதோவரான்,அதோவரான்,அதோவரான்......!" "அதோவரான், அதோவரான்,அதோ வரான்!"

சொன்னது சொன்னபடி தான் வளர்க்கும் கிளிப்பிள்ளை சொன்னதில் பர திருப்தியடைந்த எஜமானி, "அடி என் கண்ணு!" என்று அதைத் தொட்டு முத்தி விட்டு உள்ளே சென்றாள்.

அவள் தலை மறைந்ததும் கிளிப்பிள்ளை சொல்லிற்று:

"அடாடா என்ன சந்தோஷம், என்ன சந்தோஷம்! தன் சொந்த புத்திக்கு வேலை கொடுக்காதவர் யாராயிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது!”

荔,荔,苏

42. பகைமை

"கடவுளே, கடவுளே! தற்காப்புக்காக மாட்டுக்குக் கொம்பைக் கொடுத்த நீ, மனிதனுக்கு மட்டும் அதை ஏன் கொடுக்கவில்லை?" என்றான் பக்தன்.