பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


தக்க அந்த காட்சியை நான் பார்க்கவேண்டுமா?மாட்டேன்; உன்னுடைய கால்களைக் கொண்டு நீ நிற்கப் பழகும் வரை நான் உனக்கு ஒன்றுமே கொடுக்க மாட்டேன்!' என்று ஒரேடியாக மறுத்துவிட்டான் கொடாக்கண்டன்.

இப்படியே விடாக்கண்டன் எதைக் கேட்டாலும் கொடாக்கண்டன் அவனுக்கு மேற்கூறிய உபதேசத் தையே செய்து வந்தான்.

ஒரு நாள் இருவரும் ஏதோ காரியமாக அடுத்த ஊருக்குச் சென்றார்கள். வழியில் இருட்டி விட்டது. அந்த இருட்டில் அவர்கள் ஒரு மூங்கிற் பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. விடாக்கண்டன் முன்னால் நடந்தான்; கொடாக்கண்டன் அவனுக்குப் பின்னால் நடந்தான். பாலத்தைக் கடக்கப் போகும் சமயம்'மளமளவென்று மூங்கில் முறியும் சத்தம் கேட்டது. விடாக்கண்டன் பயந்துபோய் ஒரே தாவாகத் தாவி அடுத்த கரையை அடைந்தான். அதே சமயத்தில் "ஐயையோ!" என்று அலறிக்கொண்டே ஆற்றில் விழுந்தான் கொடாக்கண்டன். அடுத்த கணம், 'நண்பா! என்னைக் கரையேற்று, என்னைக் கரையேற்று!" என்று அவன் தீனக் குரலில் கதறினான்.

"என் அருமை நண்பா வேறு யாராவது விழுந்திருந்தால் அவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று நான் அவர்களைக் காப்பாற்றி யிருப்பேன். ஆனால் உன்னைக் காப்பாற்ற எனக்கு விருப்பமில்லை. என்ன இருந்தாலும் நீ என்னுடைய நண்பனல்லவா? உன்னுடைய கால்களைக் கொண்டே நீ நிற்கப் பழக வேண்டுமென்பது என் விருப்பம். ஆகவே, நீந்து|நீந்து! நீந்திக் கரையேறு!' என்றான் விடாக் கண்டன்.