பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


"நீ அதை ஏன் அடித்துக் கொன்றிருக்ககூடாது?"

"சீசீ, நாம்கூட மனிதர்களா என்ன?-தன் இனத்தைத் தானே அடித்துக் கொல்ல?- நாம் மிருகங்கள்; அப்படி யிருக்கும்போது நமக்கு நாமே எதிரிகளாக முடியுமா?அந்தப் பன்றி போனால் இன்னொரு பன்றி!” என்று சொல்லிக்கொண்டே, தாய்ப்புலி மீண்டும் இரை தேடச் சென்றது.

"குட்டிப் புலிகள் இரண்டும் தங்கள் பசியை "மறந்து, 'நாம் மிருகங்கள்: மனிதர்களைவிட உயர்ந்த மிருகங்கள்!" என்று கும்மாளம் கொட்டின.

號。浙。浙

48. வித்தியாசம்

ஊருக்கு நடுவே ஓர் அழகான பங்களா. அந்தப் பங்களாவில் சமையற்காரனையும் தோட்டக்காரனையும் தவிர வேறு யாரும் இல்லை. பங்களாவுக்குச் சொந்தக் காரனான ஒரு சுந்தர புருஷன் மாடி முகப்பில் அப்படியும் இப்படியுமாக உலாவிக் கொண்டிருந்தான்.

அன்று பெளர்ணமி; வெண்ணிலவு தண்ணொளியை வீசிக்கொண்டிருந்தது.

"ஆஹா அவள் மட்டும் இன்று நம் பக்கத்தில் இருந் திருந்தால்? இந்த வெண்ணிலவு இப்படி வீணாய்ப் போகுமா?"

சுந்தர புருஷனின் சிந்தனை சுழன்றது. "கலகல” வென்ற சிரிப்பின் ஒலியும் எங்கிருந்தோ வந்து அவன் காதில் விழுந்தன. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரையும் காணவில்லை-எல்லாம் வெறுங் கற்பனை !