பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

 "அவள் இருந்திருந்தால் இந்நேரம் பழமும் கையு மாக வந்து நின்றிருப்பாள்; அப்புறம் வெற்றிலையும் கையுமாக நின்றிருப்பாள்.

......அவளை நான் அருகில் உட்கார வைத்துக் கொண்டிருப்பேன்; பேச்சு ஸ்வாரஸ்யமாக ஆரம்பமாகி யிருக்கும்.

......அதற்குள் அவளுடைய கன்னங்கரேலேன்ற கூந்தலை அலங்கரிக்கும் வெள்ளை வெளேரென்ற மல்லிகைப்பூவின் நறுமணம் காற்றோடு கலந்து வந்து என் மூக்கை துளைத்திருக்கும்; கைகள் ஒன்றையொன்று வருடியிருக்கும். அவ்வளவுதான்; பேச்சு நின்றே போயிருக்கும்......

.....இருவரும் ஒருவரையொருவர் விழுங்கி விடுவதைப்போல் ஒரு கணம் பார்த்திருப்போம். பிறகு, பிறகு, பிறகு..... பேசாமல் இறங்கிக் கீழே போயிருப் போம்.!"

இந்த இடத்தில் ஏனோ தெரியவில்லை; சுந்தர புருஷன் தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.

மீண்டும் அவனுடைய சிந்தனை சுழன்றது:

'சீ, இதெல்லாம் என்ன நினைப்பு-நமக்கு ஏதாவது மூளைக்கோளாறா, என்ன?-இல்லை, இல்லை; எல்லாம் இந்த வெண்ணிலவின் கோளாறுதான்!”

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். பிறகு, மறுபடியும் உலாவ ஆரம்பித்தான். அன்றிரவு அவனுக்குத் தூக்கமே பிடிக்க வில்லை.

சுந்தர புருஷனின் பங்களாவுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு குடியானவன் பழைய கயிற்றுக் கட்டிலில் விரிந்து பரந்து கிடந்த நீல வானத்தை இமை கொட்டாமல்