பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. புதிய புராணம்

ஒரு சமயம் பூலோகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்ற நாரத முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர் வைகுண்டத்தை நோக்கிச் சென்றார்.

அங்கே லட்சுமி சமேதராக வீற்றிருந்த நாராயணன், "வாரும் நாரதரே! என்ன சங்கதி?" என்று விசாரித்தார்.

"சுவாமி, எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம்...... " என்று ஆரம்பித்தார் நாரதர்.

"திரிலோக சஞ்சாரியான உமக்குக் கூடத் தீராத சந்தேகம் உண்டா? அப்படி என்ன சந்தேகமோ?"

"ஆதியும் அந்தமும் இல்லாத தங்களை இயற்கை உற்பாதங்களான மழையிலிருந்தும் வெய்யிலிலிருந்தும் காப்பதாக நினைத்துக்கொண்டு, பூலோகத்தில் சிலர் தங்களுக்குக் கோயில் கட்டித் தருகிறார்கள் அல்லவா? அவர்களுடைய பெயர் உலகத்தில் என்றும் நிலைத்து நிற்கிறதாம்; ஏழைகள் வாழும் குடிசைகளை ஏற்றமிகு மாளிகைகளாகக் கட்டித் தருபவர்களின் பெயர் அந்தக் குடிசைகள் மறைவது போலவே வெகு சீக்கிரத்தில் மறைந்துவிடுகிறதாம். பூலோகவாசிகளுக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் தாங்கள் ஏழை-பங்காளன் என்பதையே அவர்கள் அடியோடு மறந்து, ஏழைகளுக்கு ஏற்றமிகு மாளிகைகள் கட்டிக் கொடுப்பவர்களை எதிர்க்கிறார்கள்; அதைவிடத் தங்களுக்குக் கோயில் கட்டித் தருவது மேல் என்றும் கருதுகிறார்கள். இந்த அக்கிரமத்துக்குத் தாங்களும் உடந்தையாயிருக்கிறீர்கள் என்று அவர்கள் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை இதில்தான் எனக்கு