பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


"ஒகோ, அப்படியா?-மன்னித்தோம்; இவனையும் விடுதலை செய்யுங்கள்!" என்றான் அரசன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே.

அதற்கும் அடுத்த நாள், காவலர்கள் மற்றொரு வனைச் சிறைப் பிடித்துக்கொண்டு வந்து, "மகாராசா, இவன் நேற்றைய தினம் கொலையுண்ட சுப்பனின் நண்பன் சொக்கன். தன் நண்பனைக் கொன்ற குப்பனின் அண்ணனைக் கொன்று இவன் இன்று பழி தீர்த்துக் கொண்டு விட்டான்!" என்றனர்.

"இது என்ன சங்கடம்? என்னுடைய கடமைகளை இவர்களே ஒருவருக்கொருவர் நிறைவேற்றிக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா, என்ன?' - அரசனுக்குத் தலையை வலித்தது. ஒரு கணம் அவன் யோசித்தான். மறுகணம் முகத்தில் அசடு வழிய அவன் மந்திரிகளை நோக்கிச் சொன்னான்:

"என் அன்புக்குகந்த மந்திரிகளே, உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்ததற்காக என்னை மன்னியுங்கள். இந்தச் சொக்கனை உடனே தூக்கிலிட வேண்டுமென்பது என் கட்டளை அது மட்டுமல்ல; இன்று முதல் நம்முடைய நாட்டில் தூக்குத் தண்டனை மீண்டும் அமுலுக்கு வருகிறது என்றும் நாடெங்கும் பறைசாற்றத் சொல்லுங்கள்!"

இதைக் கேட்டு மந்திரிகள் திருப்தியடையவில்லை. அவர்கள் தங்களுக்குள் கலந்து யோசித்தார்கள். கடைசியில் சஞ்சல புத்தியுள்ள ராஜாவினால் நாட்டுக்குத் தீமை உண்டாகும் என்று தீர்மானித்து, அந்த ராஜாவையே தூக்கில் போட்டுவிட்டார்கள்.

荔,荔,荔