பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


"கடவுளுக்கு!"

"ஏன், எதற்காக?"

"உன்னைப்போல் கரப்பானைக் கொன்று தின்னும் பல்லியாக என்னைப் படைக்காமல், பல்லி கொன்று தின்னும் கரப்பானாக என்னைப் படைத்தாரே, அதற்காகத்தான்!” என்று அதற்குத் "தத்துவ ஒத்தடம்" கொடுத்துப் பார்த்தது அது.

இதைக் கேட்டதும் பல்லியின் மனம் உருகி விட்டது. உடனே தன் பிடியிலிருந்து அதை விட்டு விடலாமா என்றுகூட அது ஒருகணம் யோசித்தது. மறுகணம் எதற்கும் தாயாரிடம் சென்று விஷயத்தைச் சொல்லிப் பார்ப்போம் என்று எண்ணி, அது வாயில் கரப்பானுடன் கிழப்பல்லியை நோக்கி விரைந்தது.

அங்கே அது கண்ட காட்சி!-எங்கிருந்தோ பூனை யொன்று வந்து கிழப் பல்லியைக் கவ்விக் கொண் டிருந்தது. அந்தப் பூனைக்கு, "உன்னைப்போல் பல்லியைக் கொன்று தின்னும் பூனையாக என்னைப் படைக்காமல், பூனை கொன்று தின்னும் பல்லியாக என்னைப் படைத்தாரே, அந்தக் கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!” என்று கரப்பானைப் போலவே கிழப் பல்லியும் தத்துவ ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தது!

இரண்டாவது முறையாக இதைக் கேட்டதுதான் தாமதம்; பல்லிக் குட்டியின் வாயிலிருந்த கரப்பான், அதன் வயிற்றுக்குள் போயே போய்விட்டது!

荔荔,荔

கு.க-6