பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


அதற்கும், "ஆமாம், ஆமாம்!' என்று ஒத்து ஊதிற்று ஒத்து.

நாதசுரத்திற்கு இது பிடிக்கவில்லை; "எல்லாருக்கும் ஆமாம், ஆமாம் தானா?-ஐயோ, என் ஒத்தே" என்று அது அங்கலாய்த்தது.

"ஆமாம், ஆமாம்!” என்று அதற்கும் ஒத்து ஊதிற்று ஒத்து.

தாளங்கள் இரண்டும் 'டங்’ என்று சிரித்தன.

"நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று அவற்றின் மேல் எரிந்து விழுந்தது தவுல்.

“என்னை மறந்துவிட்டுப் பேசுகிறீர்களே, அதனால் தான் சிரித்தேன்" என்றது அவற்றில் ஒன்று.

"போடா, பொடிப் பயலே உன்னை மறந்தால் என்னவாம்?"

"உங்கள் கச்சேரியைக் கேட்கக் கூலிக்கு ஆள் பிடிக்க வேண்டியதுதான்."

இந்த சமயத்தில், "ஏய் அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளாதே; என்னால் தனியாக வாசிக்க முடியும்அதைக் கேட்கக் கூட்டமும் சேர்க்க முடியும்!" என்றது நாதசுரம்.

"என்னால் மட்டும் முடியாதா?" என்று திருப்பிக் கேட்டது தவுல்.

"முடியுமே, கூட்டத்தைக் கலைக்க!" என்று நாதசுரம் நகைத்தது.

"அதை இப்பொழுதே பார்த்துவிட்டால் போச்சு!" என்று கும்கும், கும்கும்’ என்று முழங்கிற்று தவுல்.

கூட்டம் கூடிற்று.