பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


"மூடு வாயை எதைச் செய்தாலும் நான் தெய்வத்தின் பேரால் செய்கிறேன்; நீதியின் பேரால் செய்கிறேன்" என்று அடித்துச் சொல்லிற்று பேனா.

"தெய்வம்!- அப்படி ஒன்று இருப்பதாக நம்பிக்கை இருக்கிறதா, உனக்கு?" என்று இடித்துக் கேட்டது கத்தி.

"இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது!" என்றது அது.

"சரி, அவரவர்கள் செய்யும் பாவ-புண்ணியத்துக்குத் தக்கபடி அவர் தண்டிக்கிறார் என்பதில் நம்பிக்கை இருக்கிறதா, உனக்கு?" என்றது இது.

"இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது!’ என்றது அது மீண்டும்.

"அப்படியானால் கொலைகாரனைத் தண்டிக்கும் போது உனக்கு ஏன் தெய்வத்தின் மேல் நம்பிக்கை யில்லாமல் போய்விடுகிறது?" என்று கேட்டது இது.

"அதுதான் நீதி!' என்றது பேனா.

"நீதி!-குற்றமுள்ள நீ, குற்றமற்ற கடவுள் படைத்த உயிரைக் கொல்வதா, நீதி" என்று கத்தி கேட்டது

அதற்குமேல் பேனா பேசவில்லை-காரணம், கத்தியின் மேல் வீசுவது போலிருந்த ரத்த வாடை தன் மேலும் வீசுவது போலிருந்ததை அது அப்போது உணர்ந்ததுதான்!

浙。浙。浙