பக்கம்:விபூதி விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

விபூதி விளக்கம்

10

உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் தமிழ் மொழி ஒன்றுமே இலக்கண வரம்பு பெற்றது அது

“கண்ணுடைப் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்த விப்பசுந்தமிழ் எனை

மண்ணிடைப்பிற விலக்கண வரம்பிலாமொழிபோல்”

என்பதாலும்,

“Grammatical gender has been more fully and systematically developed in the Dravidian tongues than in, perhaps, any other languages in the world”

என்று Mr. Caldwell துரை அவர்கள் கூறுமாற்றானும் அறியலாம்.

தமிழிலக்கணத்தில் இயற்கைப்பாககுபாடுகள் அதிகமாய்க் கூறப்பட்டிருக்கின்றன. மற்றைப்பாஷைகளில் அவ்விதப்பாகுபாடுகள் காண்டல் அரிது. திணைப்பாகுபாடுகளும், காலப்பாகுபாடுகளும், உயர் திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் இன்னோரன்ன பிறவும் தமிழ்மொழி ஒன்றற்கே உரித்து.

ஆகையால் தமிழர்கள் இயற்கையாகப் பாகுபாடுகள் செய்திருந்தார்கள் என்று அறியக் கிடக்கின்றது. செயற்கையும் அச்செயற்கையில் அலங்காரமும் தெய்வீகமும் கூறுவது ஆரியர் வழக்கு எனச் செவ்வனே தெளிவாகின்றது.

ஆகையால், கூர்ந்து நோக்குமிடத்துத் தமிழர்கள் பிறப்பினால் ஜாதிகள் ஏற்படுத்தவில்லையென்றும் இயற்கையாக உள்ள மனோபாவனைகளை ஒட்டிப்பாகுபாடுகள் செய்திருந்தார்கள் என்றும் தோன்றுகிறது.

கடவுள் இல்லையென்று சொல்லுகிறவன் நாஸ்திகன் அவன் தற்கால சாதியில் எந்த ஜாதியில் சேர்ந்தவனானாலும் சரி.

இது போலவே, சைவத்தில் உட்பிரிவுகள் வகுத்திருந்தார்கள் அவை வருமாறு:—

அநாதிசைவர்.

(1) பரமசிவம் (பரமான்மா ).